தோண்ட தோண்ட மீட்கப்படும் பிணங்கள்..25 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு - நாட்டையே உலுக்கிய துருக்கி நிலநடுக்கம்

x
  • சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது.துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் ஏராளமான கட்ட‌டங்கள் சரிந்து விழுந்துள்ளன.
  • அவற்றை அகற்றி மீட்கும் பணிகளில் உலக நாடுகளின் மீட்புப்படைகள் ஈடுபட்டு வருகின்றன.
  • கட்ட‌ட இடிபாடுகளை அகற்ற அகற்ற பிணங்களாக கிடைப்பது பதைபதைக்க வைக்கிறது.
  • இதுவரை துருக்கியில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், சிரியாவில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.
  • கட்ட‌ட இடிபாடுகளை அகற்றுவதில் சிர‌ம‌ம் இருப்பதால், மீட்புப் பணியில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
  • எந்திரங்கள் பற்றாக்குறை, மீட்புப்படை பற்றாக்குறையால் இடிபாடுகள் அகற்ற முடியாத சூழல் காணப்படுகிறது.
  • அதே நேரத்தில், 6 நாட்கள் கடந்தும், இடிபாடுகளில் இருந்து சிலர் உயிருடன் மீட்கப்படுவது, மீட்புப் படையினரிடையே நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்