திருப்பதியில் புதிய நடைமுறை.. தவறினால் பணம் திரும்ப கிடைக்காது
- திருப்பதி மலையில் தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்வதில் வெப்கேம் பரிசோதனையுடன் கூடிய அதிநவீன முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
- திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைக்கேடுகளை தடுக்க, நவீன தொழில்நுட்பத்தை தேவஸ்தான நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது.
- அதன்படி, தங்கும் அறைக்கான ரசீதை வாங்குவோரின் முகம் வெப்கேமராவில் படம் பிடிக்கப்படுகிறது.
- வேலை முடிந்து அவர்கள் அறைகளை காலி செய்யும் போது, வேப்கேமராவில் பதிவான அதே நபர் இருந்தால் மட்டுமே முன்பணம் திரும்ப செலுத்தப்படும்.
- வேறொரு நபர் அறையை காலி செய்வதாக கூறினால், முன்பணம் திரும்ப செலுத்தப்படாது
- இதனால், தரகர்களை நம்பி பணம் செலவழிப்பது தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story