கார்த்திகை தீப திருவிழா : திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது - திரளான பக்தர்கள் பங்கேற்பு

x

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

தீபத்திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 9 நாட்களும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

10ம் நாளான இன்று அதிகாலை 03.50 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில், கோயில் கருவறையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீபத்தினை கொண்டு ஐந்து மடக்குகளில் நெய் ஊற்றி வேத தந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அண்ணாமலையார் கருவரையில் ஏற்றப்பட்ட இந்த பரணி தீபத்தினை சிவாச்சாரியர் கையில் ஏந்தி கோவிலில் உள்ள அம்மன் சன்னதி சென்று தீபம் ஏற்றப்பட்டு, மற்ற சன்னதிகளுக்கும் கொண்டு சென்று தீபத்தினை ஏற்றினார்.

அப்போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

தீபத் திருநாளை முன்னிட்டு கோயில் கோபுரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, உள் பிரகாரங்கள் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்