ஈரோடு இடைத்தேர்தல் விதிமுறைகள்

x
  • ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
  • தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர்
  • தொகுதியில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகம்
  • ஆண் வாக்காளர்கள் வாக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 713,
  • பெண் வாக்காளர்கள் வாக்கு 1 லட்சத்து 16 ஆயிரத்து 140.
  • மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்கு 23 ஆகும்.
  • காங்கிரசின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
  • ஈரோடு கிழக்கில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன, இதில் 32 வாக்குச்சாவடிகளை பதற்றமானதாக தேர்தல் கமிஷன் கண்டறிந்துள்ளது.
  • 5 கம்பெனி துணை ராணுவமும், 2 கம்பெனி ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
  • வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரங்த்திற்கு முன்பு அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை செய்திருக்கிறது.
  • அதன்படி ஈரோடு கிழக்கில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதனையடுத்து 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், வேட்பாளர்கள், கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய விதிகள் நடைமுறையில் இருக்கும்.
  • அதன்படி தேர்தல் தொடர்பாக எந்த ஒரு பொதுக் கூட்டம், பிரசாரத்தை நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது.
  • திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்எம். ரேடியோ, வாட்ஸ் அப், குறுஞ்செய்தி, முகநூல், ட்விட்டர் என மின்னணு வடிவிலான பிரசாரங்களை செய்யக்கூடாது
  • வாக்காளரை ஈர்க்கும் கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச் சியை நடத்தக்கூடாது
  • இந்த விதிகளை மீறும் பட்சத்தில் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கலாம்
  • பிரசாரம் ஓய்ந்துவிட்ட நிலையில் வெளிநபர்கள் யாரும் தொகுதியில் இருக்கக்கூடாது
  • வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துவர வாகனங்களை அமர்த்துவது தண்டனைக்குரியது
  • 27 ஆம் தேதி மாலை 7.00 மணிவரையில் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • 27 ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

Next Story

மேலும் செய்திகள்