- புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்குகிறது.
- புதுச்சேரியில் வழக்கமாக மார்ச் மாதம் சட்டபேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
- ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு இடையூறுகளால் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.
- மத்திய அரசு அறிவுறுத்தல்படி, இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய ரங்கசாமி தலைமையிலான அரசு திட்டமிட்டது.
- அதன்படி, கடந்த ஜனவரி 27ம் தேதி கூடிய திட்டக்குழு கூட்டத்தில், பட்ஜெட் தொகையாக 11 ஆயிரத்து 600 கோடி நிர்ணயித்து, மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.