விவசாயி சின்னம் பெற்ற கட்சியின் வேட்பாளரை தாக்கிய நாதக நிர்வாகிகளால் அதிர்ச்சி

Update: 2024-03-30 08:54 GMT

கிருஷ்ணகிரி நகர செயலாளர் அருண்மொழி, மத்திய மாவட்ட செயலாளர் நரேஷ்குமார், உறுப்பினர் கமல் ஆகிய 3 பேர் கைது

கிருஷ்ணகிரி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திராவிட தெலுங்கு தேசம் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள ஆறுமுகம் என்பவர், கரும்பு விவசாயி சின்னத்தை பெற்றுள்ள பாரதிய பிரஜா ஐக்கிய பார்ட்டி கட்சியுடன் இணைந்து கிருஷ்ணகிரியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனு பரிசீலனை முடிந்து, ஓசூருக்கு காரில் சென்று கொண்டிருந்த ஆறுமுகத்தை, நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில்,

நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி நகர செயலாளர் அருண்மொழி, மத்திய மாவட்ட செயலாளர் நரேஷ்குமார், கட்சி உறுப்பினர் கமல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்