நான்கு முனை போட்டி.. இவர்களில் யாருக்குதான் வாய்ப்பு? ரிசல்ட் எப்படி இருக்கும்? எகிறும் பல்ஸ்
தமிழகத்தில் நான்கு முனை போட்டி
இவர்களில் யாருக்குதான் வாய்ப்பு?
ரிசல்ட் எப்படி இருக்கும்? எகிறும் பல்ஸ்
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்தி சிதம்பரம், அதிமுக சார்பில் சேவியர் தாஸ், பாஜக சார்பில் தேவநாதன் யாதவ், நாம் தமிழர் சார்பில் எழிலரசி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ராமநாதபுரத்தில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நவாஸ் கனி, அதிமுக சார்பில் ஜெயபெருமாள், பாஜக சார்பில் சுயேட்சையாக ஓ. பன்னீர்செல்வம், நாம் தமிழர் சார்பில் சந்திர பிரபா ஜெயபால் போட்டியிடுகின்றனர்.
தேனி தொகுதியில், திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் ஜெயபால் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கௌசிக் போட்டியிடுகின்றனர்.
தென்காசியில், திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார், அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, பாஜக சார்பில் ஜான் பாண்டியன், நாம் தமிழர் சார்பில் இசை மதிவாணன் போட்டியிடுகின்றனர்.
தூத்துக்குடி தொகுதியில், திமுக சார்பில் கனிமொழி, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் விஜயசீலன், நாம் தமிழர் சார்பில் ரொவினா ரூத் ஜேன் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.
நெல்லையில், காங்கிரஸ் சார்பில் ராபர்ட் புரூஸ், அதிமுக சார்பில் ஜான்சிராணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் சார்பில் சத்யா போட்டியிடுகின்றனர்.
கன்னியாகுமரியில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த், அதிமுக சார்பில் பசிலியன் நசரேத், பாஜக சார்பில் பொன். ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் சார்பில் மரிய ஜெனிபர் போட்டியிடுகின்றனர்
புதுச்சேரி யூனியன் பிரதேச தொகுதியில், காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம், அதிமுக சார்பில் தமிழ்வேந்தன், பாஜக சார்பில் நமச்சிவாயம், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
மயிலாடுதுறையில், காங்கிரஸ் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், அதிமுக சார்பில் பாபு, பாமக சார்பில் ம.க. ஸ்டாலின், நாம் தமிழர் சார்பில் காளியம்மாள் போட்டியிடுகின்றனர்.