உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது யாத்திரையை தொடங்கினார். பல்வேறு மாநிலங்களில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் தனது யாத்திரையை தொடங்கினார். இதில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பங்கேற்றுள்ளார். வழிநெடுகிலும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.