கையில் டார்ச், பொம்மைகளுடன் கொரிய மக்கள் செய்த அதிர்ச்சி செயல் - பரபரப்பு காட்சிகள்
தென் கொரிய அதிபர் யூன் சூக் யோலை பதவி நீக்கம் செய்யக் கோரி அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தி யோல் திரும்பப் பெற்றார். அதிபருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் சமீபத்தில் தோல்வி அடைந்தது. மீண்டும் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்படவுள்ள சூழலில், அதிபரை பதவி நீக்கம் செய்யக்கோரி தலைநகர் சியோலில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். கையில் டார்ச்சுகளை ஏந்தியபடி அதிபருக்கு எதிராக மக்கள் கோஷமிட்டனர்.