இஸ்ரேல் கையில் எடுத்த புது முடிவு.. ஹமாஸ் கோட்டைக்குள் விழுந்த அடி - உயிரோடு புதையும் காசா

Update: 2023-11-01 13:25 GMT

பிணைக் கைதிகள், காணாமல் போனவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் உட்பட ஹமாஸ் தாக்குதலில் பலியான 34க்கும் மேற்பட்டவர்களின் குடும்பங்களுக்காக டெல் அவிவைச் சேர்ந்த சர்வதேச வழக்கறிஞர் யேல் வியாஸ் க்விர்ஸ்மேன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்... பாலஸ்தீனப் பகுதியிலும், இஸ்ரேல் எல்லையிலும் நடந்த குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது. இஸ்ரேல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லை.. மேலும், அதன் அதிகார வரம்பை இஸ்ரேல் நிராகரிக்கும் நிலையில், கடந்த 2015ல் பாலஸ்தீன அதிகாரிகள் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டதுடன், பாலஸ்தீனத்திற்கு ஐநாவில் பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில், தங்களுக்கு விசாரணை நடத்த அதிகாரம் உள்ளதாக கடந்த 2021ல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தது. அந்த சமயத்தில் இந்த முடிவை தவறான நீதி என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சாடினார்.. இஸ்ரேல் எதிர்ப்பையும் மீறி அக்டோபர் 7ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்த பாதிக்கப்பட்ட இஸ்ரேலிய குடும்பங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்