தவறு உறுதியானால்.... அதிகாரிகளுக்கு அரசு எச்சரிக்கை
வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் தர உறுதிப்பிரிவு உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் தர உறுதிப்பிரிவு உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பட்டா மாறுதல், வருவாய், சாதி, இருப்பிடம், வாரிசு உள்ளிட்ட சான்றிதழ்களுக்காக இணையதளத்தில் விண்ணப்பித்தால், பல்வேறு காரணங்களுக்காக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஆய்வு செய்ததில் சான்றிதழ் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது உறுதியானது. இந்த நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் தர உறுதிப்பிரிவு உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், விண்ணப்பங்களை நிராகரித்து தேவையற்ற வகையில் மக்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்கவே, வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் தர உறுதிப்பிரிவு உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் ஆய்வு செய்யப்படும் என்றும், தவறு நடந்திருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முதல்முறையாக ஆணையர் அலுவலகத்தில் மட்டும் தர உறுதிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக மாவட்ட அளவில் தர உறுதிப்பிரிவு அமைக்கப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
https://youtu.be/XswUoAROCF8