நீலகிரி மாவட்டம் பந்தலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் ஒற்றை யானை திடீரென வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பந்தலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாடு செல்லும் சாலையில், ஏலியாஸ் கடை என்ற இடத்தில் திடீரென சாலைக்கு ஒற்றைக்கட்டை கொம்பன் யானை வந்தது. இதனால் பாதுகாப்பு கருதி, அப்பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், உடனடியாக அங்கு சென்ற வன ஊழியர்கள் இருவர், சத்தங்கள் எழுப்பி அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.