அவதூறு வழக்கில் நாளை நேரில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் நோட்டீஸ அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு மே 29ஆம் தேதி நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில், செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துக்களை கூறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக, நாளை நேரில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.