பெலிக்ஸுடன் 5 நிமிடம் பேச டைம் கொடுத்த நீதிபதி.. நிலை தடுமாறிய சவுக்கு - தாங்கி பிடித்த காவலர்கள்
பெண் காவலர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு, வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு நடைபெற்று வரும் கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு இருவருக்கும் 55 பக்க குற்றப் பத்திரிகை நகல், நீதிபதி சரவண பாபு முன்பு வழங்கப்பட்டது. பின்னர், வழக்கு தொடர்பாக பேசுவதற்காக வைத்த கோரிக்கையின் பேரில், இருவரும் ஐந்து நிமிடம் மட்டும் பேச நீதிபதி அனுமதி அளித்தார். தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, சவுக்கு சங்கர் நிலை தடுமாறி கீழே விழச் சென்றார். அவரை போலீசார் தாங்கிப் பிடித்தனர்.