கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்ட போது, சாலையோரம் வியாபாரம் செய்து வரும் பெண்கள், திடீரென்று அமைச்சரின் காலில் விழுந்து கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் அமைச்சர் விசாரித்தபோது, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் பழ வியாபாரம் செய்து வந்ததாகவும், கிளாம்பாக்கத்துக்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டு விட்டதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர். கிளாம்பாக்கத்தில் சிறு வியாபாரிகள் விற்பனை செய்ய அனுமதி மறுத்திருப்பதால், அரசு தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.