`யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் VVPAT..' "வைக்கக்கூடாது.." எதிர்க்கும் திமுக; ஆதரிக்கும் இடதுசாரிகள்
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க, காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சியுடனும் 10 நிமிடங்கள் ஆலோசனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் காலை 11:30 மணிக்கு நிறைவடைந்தது. ஆலோசனை கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்த தேர்தலில் விவிபேட் வைக்க வேண்டும் என்ற புதிய நிலையை கொண்டு வந்துள்ளதாகவும், இது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தெரிவித்தார். இதனிடையே, இடதுசாரிகள் சார்பில், 100 சதவீதம் விவிபேட் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.