#BREAKING || கைதான மறுநாளே மரணம்.. நேற்றே டாக்டர் கொடுத்த MFC.. கைக்குழந்தையுடன் கதறும் பெண்

Update: 2024-08-09 04:05 GMT

விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அற்புதராஜ் மரணம். நேற்று கைதாகி இன்று உயிரிழந்ததால் போலீசார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு. 2016ல் போடப்பட்ட வழக்கில் ஆஜராகாமல் இருந்ததை அடுத்து பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு அற்புதராஜை நேற்று போலீசார் கைது செய்தனர். மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னர் மாலை 6 மணிக்கு விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார் அற்புதராஜ். சிறையில் சக கைதிகளுடன் நன்றாக பேசிக் கொண்டிருந்த அற்புதராஜ், இன்று காலை 6 மணிக்கு எழுப்பியும் எழுந்திருக்கவில்லை என தகவல். விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது வழியிலேயே அற்புதராஜ் இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்