கர்ப்பிணிக்கு நேர்ந்த உச்சகட்ட கதி... மனதை நொறுக்கும் அதிர்ச்சி காட்சிகள்
உடுமலை அருகே மலை கிராமத்தில் சாலைவசதி இல்லாததால், கர்ப்பிணி ஒருவரை டோலி கட்டி கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், 10க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இவர்கள், அவசரதேவைக்காக வனபகுதியில் உள்ள கரடு முரடான சாலையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், குருமலை செட்டில்மெண்ட் பகுதியை சார்ந்த இரண்டு மாத கர்ப்பிணி சுமதி என்ற பெண்ணுக்கு உடல்நலம் குன்றியது. இதனால், அவரை மூங்கிலில் தொட்டில் கட்டி தூக்கிச் சென்றனர். இந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து, 49 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், ஐந்தரை கிலோ மீட்டர் சாலை அமைக்க அரசாணை வெளியிட்டும், சாலை அமைக்க விடாமல் வனத்துறையினர் தடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வனத்துறையிடம் அனுமதி பெற்று, விரைந்து சாலை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.