திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த ரயிலில் மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணம் செய்ததுடன், அவர்கள் சீட்டுக்கட்டு விளையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணித்ததால் பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பதாகவும், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் அவதியடைவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவை பயணி ஒருவர், வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார்.