கிளாஸ் ரூமை கிளீன் செய்யும் போது HM காரில் விழுந்த குச்சிகள்...விரல் எலும்பை முறித்த ஆசிரியர்

Update: 2024-11-23 09:04 GMT

திருச்சி மாவட்டம், முசிறி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் பத்தாம் வகுப்பு மாணவனின் கைவிரல் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.முசிறியை அடுத்த பாப்பாப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், ஜடமங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ்- கோகிலா தம்பதியின் மகன் ஜெகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியின் முதல் மாடியில் உள்ள வகுப்பறையை மாணவன் ஜெகன் துடைப்பத்தால் சுத்தம் செய்தபோது, துடைப்ப குச்சிகள் சிதறி, கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தலைமை ஆசிரியரின் காரின் மீது விழுந்துள்ளது. இதனால் கோபமடைந்த தலைமை ஆசிரியர் சந்திரமோகன், மாணவனை அழைத்து பிரம்பால் அடித்துள்ளார். இதில் மாணவன் ஜெகனுக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், கை மற்றும் நெற்றியில் காயமும் ஏற்பட்டுள்ளது.மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார், தலைமை ஆசிரியரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்