டாக்டர் வீட்டில் நடந்த சோகம்.. நம்பி வீட்டில் விட்டதால் வந்த வினை - வேலியே பயிரை மேய்ந்த சம்பவம்

Update: 2023-11-24 10:33 GMT
  • தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பல் மருத்துவரின் வீட்டில் சுமார் ஏழரை லட்ச மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தினை பணிப்பெண்ணே திருடிய         சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
  • கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் லதா. 57 வயதான இவர், தென்காசி அரசு மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி                    வருகிறார்.
  • இந்நிலையில், தனது வீட்டு பீரோவில் வைக்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்தை காணவில்லை எனக்கூறி மருத்துவர் போலீசில் புகாரளித்தது பரபரப்பை                      ஏற்படுத்தியது.
  • விசாரணையில், மருத்துவரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த, கிருஷ்ணாபுரம் செவல்விளை தெருவை சேர்ந்த செல்வி என்பவரே திருட்டில் ஈடுபட்டது           தெரியவர, அவரை போலீசார் கைது செய்தனர்.
  • பணிப்பெண்னிடம் இருந்து சுமார் ஏழரை லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தின போலீசார் பறிமுதல் செய்த நிலையில், சில நகைகளை அவர்                       உருக்கியதும், விற்பனை செய்ததும் தெரியவர தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்