பழவேற்காடு அருகே கடல் சீற்றத்தால், சாலை மணல் திட்டுக்கள் குவிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே கருங்காலி பகுதியில் பழைய முகத்துவாரத்தில் கட்டப்பட்டுள்ள வெள்ள தடுப்பு சுவர் கடல் சீற்றம் காரணமாக உடைந்து விழுந்துள்ளது. இந்நிலையில் கடல் சீற்றம் காரணமாக, சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சாலையில் 4 அடி உயரத்திற்கு மேல் மணல் திட்டுக்கள் குவிந்துள்ளன. இதனால் சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சுமார் 40 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் மணல் திட்டுக்களை இயந்திரங்களை கொண்டு அப்புறப்படுத்தி, வாகனங்கள் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.