"ஃபெஞ்சல் xபுயல்..! கொந்தளிக்கும் கடல்.. சீறி வரும் அலைகள்.." வெளியான பகீர் காட்சிகள் | Rain

Update: 2024-11-29 12:55 GMT

ஃபென்சல் புயல், நாளை மதியம் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர். இதேபோல, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களும் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்