திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலை கிராமங்களில் மிதமான மழை பெய்தது. மன்னவனூர், பூண்டி, கிளாவரை, கூக்கால், கீழான வயல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. மழை தொடர்வதால் குளுமையான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், விவசாயத்திற்கு உகந்த மழை என விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.