400 ஆடுகளை கடித்து குதறிய தெரு நாய்கள்..! போராட்டத்தில் குதித்த விவசாயிகள்..! திருப்பூரில் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியில், கடந்த 6 மாதங்களில், 400 ஆடுகளைத் தெரு நாய்கள் கடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இதற்கு இழப்பீடு வழங்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த கால்நடைகளுடன் விவசாயிகள் காங்கயத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் கால்நடைகளை அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல முடியாதவாறு போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.= அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, 45 நாட்களில் இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.