கோவில்பட்டியை உலுக்கிய `மொட்டைமாடி' சிறுவன் கொலை - உறவினர்கள் கையில் எடுத்த அதிர்ச்சி முடிவு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் உண்மைக்குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் கடந்த 9-ம் தேதி கருப்பசாமி என்ற சிறுவன் மாயமாகி, பின்னர் மொட்டை மாடியில் சடலமாக மீட்கப்பட்டான்.
இந்நிலையில், உண்மை குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனக்கூறி கோவில்பட்டி மெயின் பஜாரில், சிறுவனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.