கல்வி முறையில் திடீர் மாற்றம்..? - அதிகாரிகள் போட்ட உத்தரவு - தி.மலையில் பெற்றோர் போர்க்கொடி

Update: 2024-06-15 02:50 GMT

கல்வி முறையில் திடீர் மாற்றம்..?

அதிகாரிகள் போட்ட உத்தரவு

"எங்க பிள்ளைகள அனுப்ப மாட்டோம்"

தி.மலையில் பெற்றோர் போர்க்கொடிதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆங்கில வழி அரசு நிதி உதவி பெறும் பள்ளியில், திடீரென தமிழ் வழியில் கல்வி பயிற்றுவிக்க அதிகாரிகள் உத்தரவிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துளுவ புஷ்பகிரி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில், கடந்த 4 ஆண்டுகளாக ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்நிலையில், திடீரென தமிழ் வழியில் கல்வி பயிற்றுவிக்க மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த 3 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் மாணவர்கள் புறக்கணித்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்