திடீரென இடிந்து விழுந்த அரசு பள்ளி மேற்கூரை - அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-12-11 17:14 GMT

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை காங்கிரீட் பூச்சுக்கள் திடீரென இன்று பெயர்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் மாணவ, மாணவிகள் யாரும் காயம் அடையவில்லை. கட்டிடத்தின் மேற்கூரை மிகவும் சேதம் அடைந்து காணப்படுவதால் அந்த வகுப்பறை கட்டிடம் உடனடியாக பூட்டப்பட்டு, மாணவ, மாணவிகள் மரத்தடியில் அமர வைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வகுப்பறை கட்டிடங்களை புதுப்பித்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்