கும்பகோணம் அருகே மேலவிசலூர் நாகரசம்பேட்டை வாய்க்காலை தோண்டியபோது, ஒன்னரை அடி உயரமுள்ள ஐம்பொன் பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைக்கண்ட வயலின் உரிமையாளர் செல்வமணி, கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, சிலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு, வட்டாட்சியரிடம் ஐம்பொன் பெருமாள் சிலை ஒப்படைக்கப்பட்டது.