மெரினா கடற்கரை வழக்கு' - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கோடை வெப்பம் தணிக்க, மெரினா கடற்கரைக்கு
வரும் மக்களை, இரவு 10 மணிக்கு மேலும் அனுமதிக்க
கோரி, சமூக ஆர்வலர் ஜலீல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்துவதாக மனுவில் கூறியிருந்தார். அவர்களை துன்புறுத்த கூடாது எனறு காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரியுள்ளார். இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இரவு நேரங்களில் நேர கட்டுப்பாடு இல்லாமல் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போது கோடை காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், இந்த
மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.