சென்னையை அதிரவைத்த திருடன்..வசமாக காட்டிக்கொடுத்த சிசிடிவி..திருட்டுக்கான காரணம் தான் ஷாக்கே

Update: 2024-12-14 09:43 GMT

சென்னை அய்யப்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் முப்பதாயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட வில்லிவாக்கத்தை சேர்ந்த சைதன்யா என்பவரை கைது செய்தனர். விசாரணையில், சைதன்யாவும், அவரது நண்பர் சிவாவும் கொள்ளையில் ஈடுபட்டதும், சிவாவின் அண்ணன் பிறந்தநாள் கொண்டாட்ட செலவுகளுக்காக 6-க்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து சிவாவை தேடி வரும் போலீசார், TTF வாசனின் கடையிலும் இவர்கள் கொள்ளையடித்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்