60 ஆயிரத்திற்கு இப்படியா?-இளம்பெண் வீட்டில் நிதி நிறுவன ஊழியர்கள் அட்டூழியம் -தீயாய் பரவும் வீடியோ..
கன்னியாகுமரி மாவட்டத்தில், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், வீட்டிற்கு வந்து மிரட்டி பண வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. மண்டைக்காடு பகுதியை சேர்ந்த இளம்பெண், தக்கலை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கணவர் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால், தவணை தொகை செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், இளம்பெண் வீட்டிற்கு சென்று மிரட்டல் விடுத்து, அங்கேயே அமர்ந்து, தவணை தொகையை செலுத்த கூறியுள்ளனர். இதனை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.