சந்தோசமாக கிளம்பி... சடலமாக வந்த அண்ணன், தம்பி - திண்டுக்கல்லை உலுக்கிய கோரம்

Update: 2024-12-11 17:25 GMT

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வெள்ளைசாமி என்ற 15 வயது சிறுவனும், 10 வயதான அவரின் தம்பி வள்ளியப்பனும் தங்களின் தந்தையின் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருமலைக்கேணி சாலையில் கம்பிலியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது, திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பேருந்து இரு சக்கர வாகனம் மீது பலமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்