13 பேர் உடலில் இறங்கிய விஷம்... Directஆக எமலோகம் - போலீஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்

Update: 2024-11-23 11:14 GMT

புதுக்கோட்டை பூங்கா நகர் பகுதியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு, ஆறு வாகனங்கள், 300 போதை மாத்திரைகள், 10 ஊசிகள் மற்றும் 13 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், அங்கிருந்த 13 நபர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வெள்ளனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டு, வாகனத்தில் ஏற்றும் போது, விக்னேஷ் என்பவர் சுயநினைவின்றி இருந்ததாக கூறப்படுகிறது. அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, போலீஸ் விசாரணையின்போது விக்னேஷ் இறந்துவிட்டதாகக்கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், விக்னேஷூ​க்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரது உறவினர் பாலாவிடம் அவரை அழைத்துச் செல்லுமாறு கூறியதாகவும், ஆனால், அவர்தான் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும், விக்னேஷை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்