முற்றிப்போன கள்ளக்காதல் வெறி.. ஹேர் டிரையரில் "பாம்.. பாம்.." - திரைப்படத்தை மிஞ்சும் கிளைமாக்ஸ்
பாகல்கோட் மாவட்டம் இளகல் பகுதியை சேர்ந்த பசவராஜேஷ்வரி, ராணுவ வீரரான தனது கணவர் பாப்பண்ணன் கடந்த 2017-ம் ஆண்டு உயிரிழந்த பின்னர், சித்தப்பா என்கிற சரணப்பா ஷீளவந்த் என்பவருடன் பழக்கத்தை வளர்த்துக்கொண்டார். அவருக்கு, தனது தோழி சசிகலாவையும் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால் சசிகலா, சரணப்பாவின் உறவை புறக்கணிக்குமாறு பசவராஜேஷ்வரியிடம் கூறியுள்ளார். இதனால் சசிகலா தனது உறவுக்கு தடையாக இருப்பதாக கருதிய சரணப்பா, அவரை கொல்லும் நோக்கில், தான் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து டெட்டனேட்டர் மற்றும் வெடிகுண்டு பொருட்களை திருடி, முடி உலர்த்தும் இயந்திரம் வாங்கி, அதில் வெடிகுண்டை பொருத்தியுள்ளார்.
மேலும், விசாகப்பட்டினம் முகவரியுடன் கொரியர் மூலம் அனுப்பியுள்ளார். சம்பவத்தின் போது, சசிகலாவுக்கு பதில் பசவராஜேஷ்வரி முடி உலர்த்தும் இயந்திரத்தை பயன்படுத்த முயன்றபோது அது வெடித்து பாதிக்கப்பட்டார். இதுதொடர்பாக சரணப்பாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது காதலுக்கு தடையாக இருப்பவரை பழிவாங்க காதலன் அனுப்பிய வெடிகுண்டில், காதலியே சிக்கிய சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.