நிவாரணம் வழங்கவில்லை என புகார்.. கொட்டும் மழையில் சாலை மறியல்

Update: 2024-12-11 17:04 GMT

ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கவில்லை எனக் கூறி விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் பாதிக்கப்பட்ட மக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் நகர பகுதியான ஊரல் கரைமேடு, EB காலனி, பவர் ஹவுஸ் ரோடு, காலேஜ் ரோடு, மருதூர் ரோடு போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கபடாததால், அவர்கள் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் குணசேகரன் பேச்சுவார்த்தை நடத்தி, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்