`கிறிஸ்துமஸ் விழா' - 1000 குழந்தைகளுக்கு பால் தினகரன் புத்தாடை பரிசு

Update: 2024-12-14 17:31 GMT

சென்னை வானகரத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஆயிரம் குழந்தைகளுக்கு சீஷா அமைப்பின் நிறுவனர் பால் தினகரன் புத்தாடைகளை பரிசாக வழங்கினார். வானகரத்தில் உள்ள ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில், சீஷா நிறுவனம் சார்பில், வாழ்வு கொடுப்போம் வாருங்கள்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சீஷா அமைப்பின் நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான பால் தினகரன் பங்கேற்று ஆயிரம் குழந்தைகளுக்கு புத்தாடைகளை பரிசாக வழங்கினார். அவருடன் சகோதரி இவாஞ்சலின் பால் தினகரன், சகோதரர் சாமுவேல் தினகரன், ஷில்பா சாமுவேல் தினகரன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், திறன் வளர்ப்பு பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மடிக்கணினியும் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், கணவரை இழந்த பெண்களுக்கு தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்