#JUSTIN ||பெற்றோர் கண்முன்னே எமனை அணைத்த குழந்தை.. மிகப்பெரிய போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட சடலம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே செய்யாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை சடலமாக மீட்பு
செங்கம் செய்யாற்று வெள்ளத்தில் அடித்துச் சென்ற 3வயது குழந்தையை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்பு.
கொட்டாவூர் கிராம வழியாக வரும் செய்யாற்றில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை
அப்பகுதியை சேர்ந்த காமாட்சி சஞ்சீவ் தம்பதிகளின் மூன்று வயதுடைய ஆண் குழந்தை திருச்செல்வம் விளையாடிக் கொண்டிருந்த போது செய்யாற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் தற்போது பெய்து வரும் கனமழையால் செங்கம் குப்பநத்தம் அணையில் நீர் நிரம்பி செய்யாற்றின் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது
இந்நிலையில் செங்கம் அடுத்த கொட்டாவூர் கிராம வழியாக வரும் செய்யாற்றில் அப்பகுதியை சேர்ந்த காமாட்சி சஞ்சீவ் தம்பதிகளின் மூன்று வயதுடைய ஆண் குழந்தை திருச்செல்வம் விளையாடிக் கொண்டிருந்த போது செய்யாற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்பு
குழந்தையின் பெற்றோர்கள் செய்யாற்றின் கரையோரம் உள்ள விளைநிலத்தில் பணியில் இருந்த போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஆற்றில் சென்ற நீரில் இறங்கியதை பெற்றோர்கள் கவனிக்காததால் எதிர்பாராத விதமாக ஆற்று வெள்ளத்தில் அடித்து சென்றுள்ளது
குழந்தையை நீண்ட நேரம் காணாததால் பெற்றோர்கள் அக்கம்பாக்கம் தேடிவிட்டு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது
பின்னர் செங்கம் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று தீயணை மற்றும் மீட்பு பணியாளர்கள் உதவியுடன் சுமார் 3 மணி நேரம் போராடி நீரில் தேடிய நிலையில் கரையோரம் ஒதுங்கிய சிறுவனின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
குழந்தையின் சடலத்தை பெற்றோர்களிடம் ஒப்படைத்த போது கண்ணீர் விட்ட கதரிய காட்சி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது