பட்டினம்பாக்கதில் அதிகாரிகள் திடீர் ஆய்வு.. கொதித்தெழுந்த மக்கள் - காரணம் இது தான்
சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தில் பழுதடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணிக்கான ஆய்வு நடைபெற்றது. இங்குள்ள வீடுகள் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் பழுதடைந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டுவதற்காக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வீடுகளை இடிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடித்தால் எங்கே தங்குவோம் என்றும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.