#BREAKING || பயணிகளுடன் சிக்கிய பேருந்து... நொடிக்கு நொடி ஏறும் வெள்ளம் - கதிகலங்கவிடும் காட்சி
மதுராந்தகம் அருகே பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து கிளியாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கியதால் பரபரப்பு பத்திரமாக பயணிகளை மீட்ட கிராம பொதுமக்கள்
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு காரணமாக இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானதால் அதனுடைய உபரி நீர் கிளியாற்று வழியாக செல்கிறது சகாய நகர் என்னும் இடத்தில் தாழ்வான பாலம் என்பதால் வெள்ளப்பெருக்கு மேம்பாலம் சாலையின் குறுக்கே வெள்ளப்பெருக்காக தண்ணீர் அடித்து செல்வதால் தச்சூரிலிருந்து செங்கல்பட்டுக்கு பத்துக்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கிளியாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கியது உடனடியாக அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் கயிறு மூலம் பயணிகளை பத்திரமாக மீட்டனர்
இருப்பினும் வெள்ளப்பெருக்கு காரணத்தால் பேருந்தை எடுக்க முடியாமல் தண்ணீரில் சிக்கி நிற்கின்றது
பவுஞ்சூரில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது
வெள்ளப்பெருக்கில் சிக்கிய தனியார் பெருந்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது