`தாய்லாந்து to சென்னை' ஹை குவாலிட்டி கஞ்சா - ஏர்போர்ட்டில் உண்மையை கக்கிய பெண் பயணி

Update: 2024-11-23 10:40 GMT

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை ​மீனம்பாக்கத்திற்கு விமானம் வந்த நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் சுமார் 30 வயதுடைய பெண் பயணி ஒருவர், சுற்றுலா பயணியாக தாய்லாந்து சென்றுவிட்டு, மறுநாளே விமானத்தில் சென்னைக்கு திரும்பியதால் அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து பெண் சுங்க இலாகா அதிகாரிகள் அந்தப் பயணியை தனி அறைக்கு அழைத்துச் சென்று உடைமைகளை பரிசோதித்தனர். அப்போது பையில் இருந்த பார்சலில், உயர்ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுமார் 3 கிலோ உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு 1 கோடி ரூபாய்க்கும்​மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவில் இருந்து கஞ்சா போதை பொருளை வேறு யாரோ ஒருவர் கடத்திக் கொண்டு வந்து, தாய்லாந்து நாட்டில் பெண் பயணியிடம் ஒப்படைத்ததும், போதைப் பொருள் கடத்தும் கும்பலிடம், கூலிக்காக வேலை செய்பவர் என்றும் தெரியவந்தது. இதுகுறித்து சுங்கத்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்