பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை.. கைதாகிறாரா ஓய்வுபெற்ற ஐஜி?

Update: 2024-11-23 08:49 GMT

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஆஜராகாத ஓய்வு பெற்ற ஐ.ஜி. முருகனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த 2018-ஆம் ஆண்டு பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஓய்வு பெற்ற ஐ.ஜி. முருகன் மீது சிபிசிஐடி சைபர் கிரைம் போலீசார் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, சைதாப்பேட்டை பெரு நகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சிபிசிஐடி சைபர் கிரைம் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அதன் நகலை ஓய்வு பெற்ற ஐ.ஜி. முருகன் பெற்றுக்கொண்டார்.

இந்த வழக்கு நீதிபதி சுல்தான் ஆரிபீன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வு பெற்ற ஐ.ஜிமுருகன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து முருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் தேதிக்கு நீதிபதி சுல்தான் ஆரிபீன் தள்ளி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்