துடிக்க துடிக்க அண்ணனை வெட்டி கொன்ற தம்பி.. தாய் எடுத்த விபரீத முடிவு! தென்காசியில் பரபரப்பு சம்பவம்

Update: 2024-08-14 04:18 GMT

தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே, தனது பெரியப்பா மகனான அண்ணனை, நண்பர்களுடன் சேர்ந்து தம்பி வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாவூர்சத்திரம் அடுத்த ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் . 24 வயதான இவர், பாவூர்சத்திரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பார்த்திபனை அவரது சித்தப்பா மகனான பாஸ்கர் தன் நண்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து பாவூர் சத்திரம் காவல்நிலையத்தில் பாஸ்கர் சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, தன் மகனை அண்ணன் மகன் கொன்றதை அறிந்து பார்த்திபனின் தாய் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து அவரை தீயணைப்பு துறை வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். இதனிடையே, ஒன்றாக மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறே கொலைக்கான காரணம் என தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த பார்த்திபன் மீது 15க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்