வங்க கடலில் உருவானது சுழல்.. ஆரம்பித்ததா டிசம்பர் ஆட்டம்? - உடனே பறந்த எச்சரிக்கை
கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது... நவம்பர் 25ஆம் தேதி தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் இது நிலவக்கூடும்... அதன்பிறகு, இது அடுத்த 2 நாள்களில் வடமேற்கு திசையில் தமிழக-இலங்கை கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இந்நிலையில் வரும் 25ஆம் தேதி தமிழ்நாட்டில் கனமழைக்கும், 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...