காலிங் பெல் அடித்து கதவை தட்டினால் உஷார்..உடனே திறக்கும் இல்லத்தரசிகளே உஷார் - சென்னை பெண்ணுக்கு பரிதாபம்
தாம்பரத்தில் செயின் பறிப்பை அரங்கேற்றி விட்டு ரயில் மூலம் உத்தர பிரதேசத்திற்கு தப்ப முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.சென்னை தாம்பரத்தை அடுத்த கிருஷ்ணாநகரை சேர்ந்த பிரியங்கா வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர் ஒருவர் வீட்டின் காலிங் பெல்லை அடித்துள்ளார். யார் என்று பார்ப்பதற்காக பிரியங்கா வெளியே வந்ததும் அவர் முகத்தில் மிளகாய் பொடியை தூவிய மர்ம நபர், அவர் கழத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்டது பிரியங்கா வீட்டின் பக்கத்தில் குடியிருக்கும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ராம்மிலான் என உறுதியானது. மேலும் ராம்மிலான் ஊருக்கு செல்வது தெரிய வந்தததை தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சென்ரல் ரயில் நிலையத்தில் ஊருக்கு செல்வதற்காக காத்திருந்த ராம்மிலானை சுற்றி வளைத்து கைது செய்தனர். தனது மனைவி தங்க செயின் கேட்டு தொந்தரவு செய்து வந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக ராம்மிலான் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர். செயின் பறிப்பு குறித்து புகார் வந்ததும் விரைந்து செயல்பட்ட போலீசார் 6 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.