கைதிக்கு வழக்கறிஞர் கொடுத்த அதிர்ச்சி பொருள்... அப்படியே காட்டி கொடுத்த சிசிடிவி - சேலத்தை அதிரவிட்ட சம்பவம்

Update: 2024-12-14 10:06 GMT

அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த அப்சல் என்ற கைதியை வழக்கு தொடர்பாக சந்திக்க வருவதாகக்கூறி, வழக்கறிஞர் முருகன் கார் என்பவர் விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். இந்நிலையில், கைதியிடம் அவர் பொட்டலம் ஒன்றை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில், கஞ்சா, சிம்கார்டு, ஒயர் உள்ளிட்டவை இருந்துள்ளன. இந்த வழக்கறிஞர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு இதுபோன்று கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. கார்பன் பேப்பரில் சுற்றி பொட்டலமாக எடுத்து வந்ததால் மெட்டல் டிடெக்டரில் தெரியாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி பதிவுகளில் சிறை அதிகாரி கண்காணித்து உடனடியாக கைதியை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அப்சல், சாந்தகுமார், குணசேகரன் உள்ளிட்ட 10 கைதிகள் மற்றும் வழக்கறிஞர் முருகன் கார் ஆகியோர் மீது, அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் சிறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், அதிரடி சோதனை நடத்தி மூன்று செல்போன் மற்றும் பேட்டரி உள்ளிட்டவைகளை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனிடையே, கைதியிடம் வழக்கறிஞர், பொட்டலத்தை கொடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்