வங்க கடலில் திடீர் மாற்றம்... தமிழகம் முழுவதும் மாறப்போகும் வானிலை - அடுத்த 24 மணி நேரம் உஷார்

Update: 2024-12-11 10:37 GMT

நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தற்போது நிலவுகிறது. இது இலங்கை - தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Tags:    

மேலும் செய்திகள்