கையில் அரிவாளுடன் ஆக்ரோஷமாக கருவறைக்குள் வந்திறங்கிய சாமி..? - அலறியடித்து வெளியே ஓடிய பக்தர்கள்
வீர விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் கருவறைக்குள் 30 வயது மதிக்கத்தக்க புதுக்கோட்டை வடக்கு 2ம் வீதியைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞர் கையில் அரிவாளுடன் அமர்ந்து சாமி வந்தது போல கூச்சலிட்டபடி இருந்துள்ளார். இதனை கண்ட கோயில் பட்டாச்சாரியார் மற்றும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து கூச்சலிட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த இளைஞர் வெளியில் வராமல், அரிவாளால் வெட்ட முற்பட்டார்.