கொடியேற்றத்துடன் தொடங்கிய சுப்பிரமணியசுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி முருகன், வள்ளி, தெய்வானை
மற்றும் கன்னிமூல கணபதி சுவாமிகளுக்கு
சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றன. வைகாசி விசாக திருவிழாவையொட்டி முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தினந்தோறும் சுவாமி திருவீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 22 -ம் தேதி நடைபெறுகிறது.