"நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் மருத்துவராக முடியாது" - அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு | Neet | DMK
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட குலதீபமங்கலம் கிராமத்தில், சத்துணவு சமையலறை கட்டிடம், ஊராட்சி மன்ற கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், கைம்பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராக முடியாது எனவும், தற்போது மருத்துவராக பணிபுரியும் அனைவரும் நீர் தேர்வு மூலம் மருத்துவராகவில்லை எனவும் குறிப்பிட்டார்.